பிரான்ஸில் 1945 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் அதிகபட்ச மழை!

#world_news
பிரான்ஸில் 1945 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் அதிகபட்ச மழை!

வார இறுதியில் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக Loire-Atlantique மற்றும் Vendée ஆகிய இரு மாவட்டங்களில் 1945 ஆம் ஆண்டின் பின்னர் அதிகபட்ச மழை இன்றும் நாளையும் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 இல் இருந்து 36 மணிநேரங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாவட்டங்களிலும் 36 மணிநேரங்கள் வரை தொடர்ச்சியாக மழை பதிவாகுவது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இதுவே முதன்முறையாகும் என Météo France அறிவித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4