வெளிநாட்டிலிருந்து வந்த கணவனால் மனைவி கொடூரமாக அடித்துக்கொலை

Reha
4 years ago
வெளிநாட்டிலிருந்து வந்த கணவனால் மனைவி கொடூரமாக அடித்துக்கொலை

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் தொழிலுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த 18 நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் தொடர்பில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மனைவியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4