கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா.. சற்றுமுன் அவரே வெளியிட்ட அறிவிப்பு!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமானவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வந்தார்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் முன்பைவிட தற்போது அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
இவ்வாறு சமந்தா கவர்ச்சியாக நடிப்பது, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தாவிடம் பல முறை பேசியும் அவர் மாறுவதாக தெரியவில்லையாம்.