பெண்களை குறிவைத்து மிதிவண்டியில் வரும் நபர்

Prasu
4 years ago
பெண்களை குறிவைத்து மிதிவண்டியில் வரும் நபர்

லண்டனில் ஒரு நபர் ஒரே மாதத்தில் ஏழு பெண்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டனில், ஒரு நபர் சில பெண்களை குறிவைத்து, மிதிவண்டியில் அவர்களை பின்தொடர்ந்து செல்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளதாவது, இதில் டவர் ஹெம்லெட்ஸ் என்ற பகுதியில் தான் அதிகமான சம்பவங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நடந்திருக்கிறது.

அந்த நபர், பல தடவை பெண்களுக்கு முன்பு நின்றுகொண்டு அருவருப்பான செயல்களை செய்ததோடு, பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், அந்த நபர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான மிதிவண்டியில் வந்ததாகவும், முகக்கவசம் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, காவல்துறையினர் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4