IPL Match47 - சென்னை உடனான போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Prasu
4 years ago
IPL Match47 - சென்னை உடனான போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது

அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

  • டுபெலிசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, ரெய்னா,  ராயுடு, சாம் கரன், ஷர்துல் தாகூர், ஆசிப்,  ஹசில்வுட், ஜடேஜா, எம்எஸ் டோனி.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

  • எவின் லீவிஸ்,  யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்,  ஆகாஷ் சிங், துபே, பிலிப்ஸ், ராகுல் டெவாட்டியா,  மில்லர்,  சேத்தன் சகாரியா, மயங் மார்கண்டே  முஸ்டாபிஜுர் ரஹ்மான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4