அயல் வீட்டாரை பழிவாங்க மலங்கழித்து அசிங்கப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

#Anuradapura #Police
Prathees
4 years ago
அயல் வீட்டாரை பழிவாங்க மலங்கழித்து அசிங்கப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

தனது பக்கத்து வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிளில் சிறுநீர் இமலம் கழித்து அசிங்கப்படுத்தியதாக உதவிப் பொலிஸ் பரிசோதகர்  ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் அனுராதபுரம் திறப்பன காவல் நிலையத்தில் பணி புரியும் உப பொலிஸ் பரிசோதகர் என  அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபர் பக்கத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்த அசிங்கமான  காரியத்தை செய்துள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக  சிரேஸ்ட  பொலிஸ் அதிகாரி கூறினார்.

சந்தேக நபருக்கும் அயல்வீட்டாருக்கும்  இடையே நீண்டகாலமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்டை வீட்டாரை பழிவாங்குவதற்காக இந்த சம்பவம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிpயவந்துள்ளது. 

சஉப பொலிஸ் பரிசோதகரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு லட்சம் ரூபாய் சரீர  பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4