04.10.2021 இன்றைய ராசி பலன்

#Astrology
Prasu
3 years ago
04.10.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: செலவு வருவதற்கு முன்பாகவே வரவு வந்து நிம்மதி தரும்.
பரணி: கையிருப்பு கூடுதலாகும். சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் கடன் தொல்லை தீரும். உற்சாகமான நாள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: அதிக வேலை இருந்தாலும் அதிக மகிழ்ச்சி உண்டு.
ரோகிணி: மற்றவர் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரிகள் கூடுதலாக பணிபுரிந்தால் லாபம் கூடும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: புதியவர்களுடன் பணியாற்றும்போது கவனமாக இருங்கள்.
திருவாதிரை: சிலருக்கு எதிர்பாராத செல்வம் சேர்வது பற்றிய செய்தி வரும்.
புனர்பூசம் 1,2,3: யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: உதவியாளர்களின் ஒத்துழைப்புடன் முக்கிய பணியை முடிப்பீர்கள்.
பூசம்: இளைஞர்கள் முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆயில்யம்: உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதுாகலம் உண்டு.

சிம்மம்: 
மகம்: உடல்நலம் பாதித்த உறவினருக்கு நன்மை செய்வீர்கள்.
பூரம்: உயர்பதவியில் உள்ளவரை அவரது இருப்பிடம் சென்று பார்ப்பீர்கள்.
உத்திரம் 1: சிலருக்கு பதவி உயர்வும், பொறுப்புகளும் கிடைக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: அவசரம் கருதி சில விஷயங்களை முடிக்க வேண்டி வரும்.
அஸ்தம்: முன்பு ஏற்பட்ட மனக்குறை ஒன்று அகலும். பரபரப்பான நாள்.
சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: நல்ல நண்பர்களின் உதவியை நாடி வெற்றி காண்பீர்கள்.
சுவாதி: அலுவலக பணிகளை விரைவாக முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: மனதில் அமைதி நிலவும். குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு உதவி செய்வீர்கள்.
அனுஷம்: நண்பர்கள் மூலம் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.
கேட்டை: குடும்ப ஒற்றுமை பலப்படும். உங்களின் உழைப்புக்கு நற்பலன் கூடும்.

தனுசு: 
மூலம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த முயற்சி செய்வீர்கள்.
பூராடம்: தளர்வடைந்த விஷயம் ஒன்று தக்க நபரின் உதவியால் முடியும்.
உத்திராடம் 1: பிறருடைய குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: பணியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
திருவோணம்: நவீன கருவிகளை உபயோகிப்பீர்கள். கற்பனை பயம் வரும்.
அவிட்டம் 1,2: சிறு சிறு கடன் தொல்லை இருந்தாலும் பாதிப்பு இருக்காது.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சமாளிக்கும்படியான சிறு பிரச்னை ஒன்று ஏற்பட்டு விலகும்.
சதயம்: தடுமாற்றம் உண்டாகாத தன்னம்பிக்கை தேவை. பேச்சில் நிதானம் அவசியம்.
பூரட்டாதி 1,2,3: வேலைகளில் அதிக கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

மீனம்: 
பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை எளிதாக சமாளிப்பீர்கள்.
உத்திரட்டாதி: நிதானப்போக்கில் நன்மைகள் வரும். மனத்தெளிவு ஏற்படும்.
ரேவதி: பங்குச்சந்தை லாபம் தரும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!