IPL Match51 - 8.2 ஓவர்களில் வெற்றியை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி

Prasu
4 years ago
IPL Match51  -  8.2 ஓவர்களில் வெற்றியை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி


ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆடினர். என்றாலும் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். எவின் லீவிஸ் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ராஜஸ்தான் ஸ்கோர் 5.3 ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (3), ஷிவம் டுபே (4) ஆகியோரை நீஷம் வெளியேற்ற, க்ளென் பிலிப்ஸை (4) கவுல்டர்-நைல் வெளியேற்றினார். இதனால் 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியது.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, கவுல்டர்-நைல், நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களே அடிக்க முடிந்தது. நீஷம் 4 ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்புரா 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4