ஷங்கர் படத்திற்காகவே மிக பிரமாண்டமாக தயாராகும் அரங்கு

Prabha Praneetha
4 years ago
ஷங்கர் படத்திற்காகவே  மிக பிரமாண்டமாக தயாராகும்  அரங்கு

இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிறார் ராம்சரண் தேஜா .

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். 

இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. 


இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கர் படத்தின் படப்பிடிப்புக்காக புனேவில் பிரம்மாண்டமாக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. 

இதில் சில சண்டைக் காட்சிகள் மற்றும் கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் மோதும் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ஷங்கர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4