முதல் முறையாக தனது தாயாரோடு சேர்ந்து நடிக்கும் பிருத்விராஜ்!

Prabha Praneetha
4 years ago
முதல் முறையாக  தனது  தாயாரோடு சேர்ந்து நடிக்கும் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் தற்பொழுது அவரின் தாயாரோடு  இணைந்து நடித்து வருகிறார்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். 

இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் ரிலீஸாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவர் பிருத்விராஜை வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் முதல் முதலாக பிருத்விராஜ் தன்னுடைய அம்மாவான மல்லிகாவோடு இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் இருவரும் அம்மா மகனாகவே நடிக்கின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4