பண்டோரா ஆவணங்கள்: நடேசனுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு

#Investigation
Prathees
4 years ago
பண்டோரா ஆவணங்கள்: நடேசனுக்கு  லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு

திருக்குமார் நடேசனை நாளை  ஆஜராகுமாறு லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு  (CIABOC) அழைப்பு விடுத்துள்ளது.

 "பண்டோரா பேப்பர்ஸ்" மீது வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை பதிவு செய்யவே அழைப்பு விடுக்கப்படடுள்ளது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நடேசன் வாக்குமூலத்தை பதிவு செய்ய அழைக்கப்பட்டுள்ளார் எனவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிpத்தர்.

அதன்படி "பண்டோரா பேப்பர்ஸ்" இல் பட்டியலிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க இலஞ்ச ஆணைக்குழு விசேட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

அதேவேளை ‘பண்டோரா பேப்பர்ஸ்’ இல் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி விசாரணை நடத்தவும் விசாரணை குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் பல்வேறு கணக்குகள்/ சொத்துக்களைக் கொண்டிருப்பதற்காக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் (ICIJ) வெளியிடப்பட்ட ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4