இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்  நன்கொடை

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளயது.

மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள் மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை வழங்கப்பட்டது.

உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி.

ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார்.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் தூதரக ஊழியர்கள் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4