இருவேறு வாகன விபத்துகளில் வயோதிபர்கள் இருவர் மரணம்!

#SriLanka #Accident #Death
Prasu
4 years ago
இருவேறு வாகன விபத்துகளில் வயோதிபர்கள் இருவர் மரணம்!

மதவாச்சி, அக்போபுர ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா சந்திக்கு அருகில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

கினிகட்டுவ ரஹோவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது வயோதிபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4