பிரான்ஸ் கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!

#world_news #France
பிரான்ஸ் கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக பதிவான புதிய நாளாந்த தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை நிலவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 4,615 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று 1,1% இல் இருந்து 1% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரை 7,043,316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6,093 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 11,000 பேருக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

புதன்கிழமை 1,249 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை 1,200 பேராக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

35 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 116,991 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 90,142 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்தவர்களாவர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4