வவுனியாவில் 17 வயது சிறுவன் மாயம்

Prabha Praneetha
4 years ago
வவுனியாவில் 17 வயது சிறுவன் மாயம்

வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்துவரும்  சிறுவன், ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் என்ற எனது மகன், நேற்று காலை அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார்.

எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை. ஆகவே அவரைக்கண்டு பிடித்துத்தாருங்கள் என அவரது தந்தை, பொலிஸில்  முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4