பிரான்ஸ், மெற்றோக்களில் புதிய திறன் உணரும் கருவிகள்!

#world_news #France
பிரான்ஸ், மெற்றோக்களில் புதிய திறன் உணரும் கருவிகள்!

மெற்றோ நிலையங்களில் புதிய திறன் உணரும் கருவிகள் (sensors) பொருத்தப்பட உள்ளன.

RATP தரப்பில் தெரிவிக்கும் போது, மெற்றோக்களில் சூழல் மாசடைவு அதிகளவில் உள்ளது. இந்த மாசடைவின் அளவை கண்காணிக்கும் கருவிகளே தொடருந்து நிலையங்களில் பொருத்தப்பட உள்ளன. இவ்வகை கருவிகள் ‘உடனுக்குடன்’ மாசடைவை கணிக்கக்கூடிய திறன் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் Châtelet-les-Halles மற்றும் Nation ஆகிய இரு நிலையங்களில் இந்த கருவிகள் பொருத்தப்பட உள்ளன. அத்தோடு இவ்வருட இறுதிக்குள் பல மெற்றோ தொடருந்து நிலையங்களில் இந்த கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4