வீதியோரத்தில் சிறுநீர் கழித்த சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்ற நபர் கைது

Prasu
4 years ago
வீதியோரத்தில் சிறுநீர் கழித்த சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்ற நபர் கைது

மீரிகம – Nalla பகுதியில் வீதியோரத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்று சுமார் அரை மணி நேரம் முழங்காலில் நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ருவான் புஷ்பகுமார என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதில் Nalla திவுல்தெனியவைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களே பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இரண்டு சிறார்களும் சைக்கிளில் சென்ற போது, சைக்கிளை நிறுத்தி விட்டு விதியோரத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் அறிந்து சிறுவர்களின் பெற்றோர் சென்று அவர்களை மீட்டுள்ளனமை குறப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4