குத்து விளக்கில் இத்தனை வித்தியாசங்கள் உண்டா?

Keerthi
3 years ago
குத்து விளக்கில் இத்தனை வித்தியாசங்கள் உண்டா?

அகல் விளக்கு,காமாட்சி அம்மன் விளக்கு,குபேர விளக்கு என்று விளக்கில் எத்தனை வகைகள் இருந்தாலும் காமாட்சி அம்மன் விளக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் உள்ளது.

காமாட்சி அம்மன் விளக்கு எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் ஏற்றப்பட வேண்டிய தீபமாகும்.இதில் ஒளிந்து கொண்டிருக்கும் தத்துவம் மிகவும் புனிதமானது.எத்தனை விளக்குகள் இருந்தாலும் ஒரே ஒரு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்தால் அத்தனை தெய்வங்களின் அருளையும் ஒரு சேர பெற முடியும் என்பது ஐதீகம்.

உலக மக்களின் நன்மைக்காக வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள் காமாட்சி அம்மன்.அவருடைய தவத்தைக் கண்ட மற்ற தெய்வங்கள் அனைவரும் காமாட்சி அம்மனுக்குள் இறங்கியதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.அதனால் தான் மற்ற தெய்வங்களை காட்டிலும் காமாட்சி அம்மனுக்கு மிகச்சிறந்த சக்திகள் உள்ளது.இதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம்.

குலதெய்வத்தின் ஆசி,அருள் கிடைப்பதற்கு காமாட்சி அம்மன் தீபத்தை ஏற்றி வழிபட்டால் போதும் என்பார்கள்.ஒரு சிலருக்கு தன் குல தெய்வம் என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள்.அவர்கள் காமாட்சி அம்மன் விளக்கை குல தெய்வமாக நினைத்துக் கொண்டு"என் குலத்தை தழைக்க செய்"என்று மனமார வேண்டிக் கொள்வார்கள்.

நம்முடைய வீட்டு பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு தினமும் ஏற்றி வழிபடுபவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதனால் தான் தினமும் வீட்டில் விளக்கேற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

விசேஷ பூஜை,புனஸ்காரங்கள் செய்யும் பொழுது ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.அப்பொழுது கூட காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றிய பிறகு,குத்து விளக்கை ஏற்ற வேண்டும் என்பது சாஸ்திரம்.

திருமணமான மணமக்களுக்கு கையில் காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து வலம் வர சொல்வதும் இந்த காரணத்தினால் தான்.புதுமண தம்பதிகளுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும்,ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது இதன் தத்துவம்.திருமண வைபவம் முடிவுற்றதும் மணமகள் மணமகன் வீட்டிற்கு முதன் முதலாக ஏற்றப்பட வேண்டியது தீபமும் இந்த காமாட்சி அம்மன் விளக்கில் தான்.காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றிய பின் தான்,குத்து விளக்கை ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.இதனால் மணப்பெண்ணுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும்,அந்த வீட்டின் குல தெய்வத்தின் அருளும் கிடைத்து குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

காமாட்சி அம்மன் விளக்கை தினமும் ஏற்றி வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறும்.குலம் தழைக்கும்,வறுமை நீங்கும்,கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்,செல்வ வளம் பெருகும்,வழக்குகள் வெற்றியடையும்,எதிர்ப்புகள் விலகும்,குடும்பத்தில் சலக விதமாக மங்களமும் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புகள் மிக்க காமாட்சி அம்மன் விளக்கை தினமும் ஏற்றி நாமும் வழிபடுவோம்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!