IPL Match55 - மும்பையின் பிளே ஆப் கனவை உடைத்த ஹைதராபாத் அணி

Prasu
4 years ago
IPL Match55  -  மும்பையின் பிளே  ஆப்  கனவை  உடைத்த ஹைதராபாத் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. 

டாஸ் வென்று பேட் தேர்வு செய்த மும்பை அணி அதிரடியாக ஆடி 9 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. இசான் கிஷான் பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்டு 32 பந்தில் 84 ரன்கள் குவித்து அவுட்டானார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் 40 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.

ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தினார். ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். ஜேசன் ராய் 34 ரன்னிலும், அபிஷேக் சர்மா 33 ரன்னிலும் அவுட்டாகினர். 

அடுத்து இறங்கிய கேப்டன் மணீஷ பாண்டே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது, மணீஷ் பாண்டே 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை அணி சார்பில் பும்ரா, கவுல்டர் நைல், நீஷம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும் பிளே ஆப் கனவு தகர்ந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4