09.10.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
09.10.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: அவசரப் பேச்சினால் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள்.
பரணி: நட்பில் ஏற்பட்ட விரிசல் நீங்கும். செலவு ஒன்று மகிழ்ச்சி தரும்.
கார்த்திகை 1: விரோதிகள் காணாமல் போவார்கள். பணம் வரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குழந்தைகள் பரிசு வாங்குவார்கள். உழைப்பினால் நன்மை வரும்.
ரோகிணி: சுப விரயங்கள் உண்டு. உடன்பிறந்தோரை சந்திப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: திட்டமிட்ட தெய்வ வழிபாடு நன்கு அமையும். கவலை நீங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: குழந்தைகள் வெற்றி பெறுவர். தந்தைக்கு நன்மை உண்டு.
திருவாதிரை: புதிய வேலை கிடைக்கும். வாகன யோகம் உண்டு.
புனர்பூசம் 1,2,3: பழைய நிகழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வருத்தம் நீங்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: குழந்தைகளால் வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் ஒன்று நீங்கும்.
பூசம்: எந்தப் பிரச்னையும் வந்த வேகத்தில் மறையும். கலகலப்பான நாள்.
ஆயில்யம்: அரசாங்க வேலை கிடைப்பது பற்றிய செய்தி வரும்.

சிம்மம்: 
மகம்: தந்தைக்கு நன்மை ஒன்று வரும். குடும்ப பாசம் அதிகரிக்கும்.
பூரம்: குழந்தைகள் இடையே நெருக்கம் கூடும். வெளிநாட்டிலிருந்து நன்மை வரும்.
உத்திரம் 1: போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உழைக்கத் தயங்க மாட்டீர்கள். முயற்சிகள் வெற்றி தரும்.
அஸ்தம்: திட்டமிட்டு செயல்களை செய்து நன்மை அடைவீர்கள்.
சித்திரை 1,2: திடீர் அதிர்ஷ்டத்தை நம்பி எதுவும் செய்ய வேண்டாம்.

துலாம்: 
சித்திரை 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் அதன் பலன் இனிக்கும்.
சுவாதி: உழைப்பாலும் முயற்சியாலும் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: பயணம் ஒன்று செய்ய வேண்டி வரும். களைப்பான நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மனதுக்கு நெருக்கமான ஒருவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
அனுஷம்: பணியில் கவனத்தை பாதிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
கேட்டை: எதிர்பாலினத்தை சேர்ந்த நபரால் நன்மை ஒன்று ஏற்படும்.

தனுசு: 
மூலம்: கடுமையான உழைப்பின் காரணமாக ஆதாயம் அதிகரிக்கும்.
பூராடம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உற்சாகத் தகவல் ஒன்று வரலாம்.
உத்திராடம் 1: வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். உறவினர் உதவுவர்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்கும் யோகம் உண்டு.
திருவோணம்: நிதி வளர்ச்சி கூடும். தாயார் பற்றிய கவலைகள் தீரும்
அவிட்டம் 1,2: பெண்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்வர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: எதிர்பாராத செலவு ஒன்று ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும்..
சதயம்: மற்றவர்களுக்கு கைமாறிய பொறுப்பு மீண்டும் உங்களிடம் வரலாம்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: வருமானம் அதிகரிக்கும். வழிபாடுகளில் கவனம் கூடும்.
உத்திரட்டாதி: தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரேவதி: சோம்பலை தவிர்த்து செயல்பட வேண்டியிருக்கும். பரபரப்பான நாள்.