கண்டியைச் சேர்ந்த 6 வயது சிறுமி  பாசிக்குடா சுற்றுலா விடுதியில் மரணம்

#Death #Batticaloa
Prathees
4 years ago
கண்டியைச் சேர்ந்த 6 வயது சிறுமி  பாசிக்குடா சுற்றுலா விடுதியில் மரணம்

கண்டி - ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த  ஆறு வயது சிறுமி ஒருவர் பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா   பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் குறித்த சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4