வெளிவந்தது பால் மாவிற்கான புதிய விலை

#Milk Powder #SriLanka
Prathees
4 years ago
வெளிவந்தது பால் மாவிற்கான புதிய விலை

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 250 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பது குறித்த முடிவு திங்கள்கிழமை (11) அறிவிக்கப்படும் என்று பால் பவுடர் இறக்குமதியாளர்கள் நேற்று  தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த முடிவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4