இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடர்பில் வெளியான செய்தி!

#SriLanka #Bus
Nila
4 years ago
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான  பேருந்து  சேவை  தொடர்பில் வெளியான செய்தி!

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை எதிர்வரும் 21ம் திகதி வரை ஆரம்பிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்குள் முன்னெடுக்கப்படும் பஸ் போக்குவரத்து, அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் 15ம் திகதி முதல் அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4