கனடாவின் லண்டனில் குறைந்த விலையில் எரிபொருள்... வெளியாகியுள்ள பட்டியல்

#world_news #Canada
கனடாவின் லண்டனில் குறைந்த விலையில் எரிபொருள்... வெளியாகியுள்ள பட்டியல்

கனடாவில் கடந்த சில வாரங்களில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், லண்டனில் குறிப்பிட்ட சில பகுதிகளில் விலை குறைவாக விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.

லண்டனில் வியாழக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் லிற்றருக்கு 1.40 டொலர் என விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட விடுமுறை நாட்கள் வருவதால், எரிபொருள் விலையில் இன்னும் ஏற்றம் காணலாம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதாலும் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும் விலை உயர்வு எகிறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கனடாவை பொறுத்தமட்டில் 7 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இருப்பினும் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும் பகுதிகளை மக்கள் நாடி வருவதாகவே தெரிய வந்துள்ளது. தற்போது ஒன்ராறியோவின் லண்டன் நகரில் மட்டும் 10 பகுதிகளில் மிகவும் குறைவான விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் பட்டியல் ஒன்று பொதுமக்கள் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ளது.

சராசரியாக 1.30 டொலரில் இருந்து 1.35 டொலர் வரையில் இங்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் மலிவு விலையில் எரிபொருள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4