சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட அறுவர் கைது!

Prabha Praneetha
4 years ago
சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட அறுவர் கைது!

வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில், தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் அறுவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

வெலிக்கந்த, குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 23, 29, 33, 37, 59 வயதுகளையுடைய அறுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுப் பணிக்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4