அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் படுகாயம்…. 

#world_news #United_States
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் படுகாயம்…. 

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் அனைவரும் பள்ளி வளாகம் அருகில் குவிந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இதில் வயது முதிர்ந்த ஒரு ஆசிரியரும் இருக்க கூடும் என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலினால் கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியிலேயே அந்த ஆசிரியைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ்(18) என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய அந்த நபர் தாக்குதலுக்கு பின் வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். மேலும் திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்பவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4