கிளிநொச்சியில் 5 வயதுச் சிறுமியின் வாயில் சூடு வைத்த தாய்

#Kilinochchi #Arrest #Police
Prathees
4 years ago
கிளிநொச்சியில் 5 வயதுச் சிறுமியின் வாயில் சூடு வைத்த தாய்

கிளிநொச்சியில் 5 வயதுச் சிறுமியின் வாயில் நெருப்பால் சூடு வைத்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாயார் நேற்றைய தினம் சமைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்பளம் வாங்கி வருமாறு மகளிடம் கூறியுள்ளார்.

அப்பளத்தை வாங்கிய சிறுமி அதை பச்சையாக உட்கொண்டுள்ளார். இதனால்ஆத்திரமடைந்த தாய் 5 வயதுச் சிறுமி வாயில் நெருப்பால் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்றவேளை இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். 


பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4