தீயில் கருகி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியை: கண்ணீரில் நனைந்த இராகலை

#Death
Prathees
2 years ago
தீயில் கருகி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியை: கண்ணீரில் நனைந்த இராகலை

இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. 

தோட்ட மக்கள் அணிதிரண்டு கண்ணீர் மல்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். 

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. 

தோட்ட மக்கள் எவரும் இன்று தொழிலுக்கு செல்லவில்லை. 

இராகலை இலக்கம் 01 தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று 7ம் திகதி  இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது. 

இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் இவ் வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

உடல் கருகிப் பலியோனோரின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன்இ உடற் கூற்று மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவேண்டும் என இன்று மாலை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போதுஇ உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!