10.10.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
10.10.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: முன்யோசனையுடன் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
பரணி: பேச்சில் நிதானம் உள்ளோருக்குப் பிரச்னையற்ற நாள்.
கார்த்திகை 1: நண்பர்களுக்காக சந்தோஷத்துடன் செலவு செய்ய நேரிடும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய நட்பு கிடைக்கும்.
ரோகிணி: தெய்வ வழிபாட்டால் அமைதி காண்பீர்கள். பரபரப்பான நாள்.
மிருகசீரிடம் 1,2: குழந்தைகளின் பணியில் இருந்த சிரமம் ஒன்று தீரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாளைய எண்ணம் ஒன்று நிறைவேறி மகிழ்வீர்கள்.
திருவாதிரை: புதிய பொருள் சேர்க்கை உண்டு. உற்சாகம் கூடும்.
புனர்பூசம் 1,2,3: வராது என நினைத்த பணம் இன்று கிடைக்கலாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: நட்பு வட்டம் விரிவடையும். கலைத்துறையில் ஆர்வம் கூடும்.
பூசம்: காத்திருந்த வாய்ப்பு ஒன்று நல்லோர் முயற்சியால் கைகூடும்.
ஆயில்யம்: திருப்தி தரும் நாள். வருங்காலம் பற்றிய திட்டம் உருவாகும்.

சிம்மம்: 
மகம்: நண்பர்கள் கைகொடுத்து உதவுவதால் முயற்சி வெற்றி தரும்
பூரம்: புத்திசாலித்தனத்தால் சாதனை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
உத்திரம் 1: உயரதிகாரிகளின் தொடர்பு நன்மை தரும். அதிர்ஷ்டமான நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சொத்து சம்பந்தமாக முக்கியமானவரை சந்திப்பீர்கள்.
அஸ்தம்: பல நாள் கனவு நனவாவதற்கு உறவினர் உதவ முன்வருவர்.
சித்திரை 1,2: குழந்தைகள் நன்மை அடைவார்கள். நிம்மதி கூடும் நாள்.

துலாம்: 
சித்திரை 3,4: பல நாள் திட்டம் பற்றி யோசித்து முடிவு எடுப்பீர்கள்.
சுவாதி: தாய் வழி உறவினர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவர்.
விசாகம் 1,2,3: பெற்றோர் உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சுபநிகழ்ச்சி ஒன்றினைப் பற்றிய திட்டம் நிறைவேறும்.
அனுஷம்: குழந்தைகளின் முன்னேற்றம் பற்றிய பயம் நீங்கும்.
கேட்டை: கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து சேரும் நாள்.

தனுசு: 
மூலம்: நினைத்தது நிறைவேறுவதில் சிறு தாமதம் நேரும்.
பூராடம்: வாகனப் பராமரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
உத்திராடம் 1: பொதுவாழ்வில் சேவை மனப்பான்மை அதிகரிப்பதால் புகழ் கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நண்பர்களுடன் நெருக்கம் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
திருவோணம்: நீங்கள் சமீபத்தில் மேற்கொண்ட பயணம் எதிர்பார்த்த நன்மை தரும்.
அவிட்டம் 1,2: உங்களின் தயவால் நண்பர்கள் உயர் நிலை அடைவார்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பேச்சில் நேர்மை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சதயம்: பெரியோர்களை மதித்துப் போற்றி அவர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி உண்டு.

மீனம்: 
பூரட்டாதி 4: பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.
உத்திரட்டாதி: அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தி பலன் அடைவீர்கள்.
ரேவதி: உங்களின் பொறுப்பு கூடும். பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும்.