சினிமா பாணியில் கிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தின் முன் வாள் வெட்டு

#Kilinochchi #Hospital
Prathees
4 years ago
சினிமா பாணியில் கிளிநொச்சி  வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தின் முன் வாள் வெட்டு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில்  சிகிச்சைக்காக காத்திருந்த நபரொருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது;.

நேற்று (09) மாலை 5.30 மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

மாலை 5.30 மணி அளவில் வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த மூவர் பார்வையாளர்கள் போன்று சென்று குறித்த நோயாளியின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர்.

இதன் போது அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி தியட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர கிசிச்சை கூடத்தின் வாசலுக்குள் சென்றவர்கள் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த தாம் தேடிச் சென்ற நபரை வாசலில் வைத்து வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருந்தவேளையிலே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வெட்டுக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட நபர் இரத்தம் வடிய சத்திர கிசிச்சை கூடத்திற்குள் ஓடியுள்ளார். வெட்டிய நபர்கள் மோட்டார்ர் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 கிளிநொச்சி   பொலிஸார் மேலதிக விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4