இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ 100 ரூபா!

Prabha Praneetha
4 years ago
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ 100 ரூபா!

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று  கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4