தம்புள்ளையில் கல்வி கற்கச் சென்ற  14 வயது சிறுமி சடலமாக மீட்பு 

#Death #Police
Prathees
4 years ago
தம்புள்ளையில் கல்வி கற்கச் சென்ற  14 வயது சிறுமி சடலமாக மீட்பு 

தம்புள்ளை - கலோகஹஹெல பகுதியில் உள்ள வீடொன்றில் 14 வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சிறுமிக்கு கணிதப்பாடத்தினைக் கற்பிப்பதற்காக கடந்த 6ஆம் திகதி அருகில் உள்ள வீடொன்றிற்கு குடும்ப நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். 

இந்நிலையில் சிறுமி  நீண்ட நேரமாக வீடு திரும்பாததையடுத்து சிறுமியின் தாய் தம்புள்ளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர், சிறுமி கற்றல் செயற்பாடுகளுக்காகச் சென்ற வீட்டை சோதனையிட்டனர்.

இதன்போது அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் கட்டிலில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் அந்த சிறுமியை அழைத்து சென்றவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

வீட்டை விட்டு தப்பி ஓடிய தம்பதியினரை கைது செய்ய தம்புள்ளை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4