டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அபாய எச்சரிக்கை

Reha
4 years ago
டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அபாய எச்சரிக்கை

"இலங்கையில் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளது." - இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்துச் செயற்பட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா வைரஸ் தொற்றை மறந்து செயற்படுகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4