நாட்டில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

#SriLanka #Covid 19
Prasu
4 years ago
நாட்டில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்று இதுவரை 720 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 526,383 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,097 ஆக அதிகரித்துள்ளது
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4