சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு- இதோ புதிய விலைகள்!

Prathees
4 years ago
சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு- இதோ புதிய விலைகள்!

லிற்ரோ மற்றும்  லாஃப் நிறுவனங்கள் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, லிற்ரோ 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேள,  லாஃப் கேஸ் நிறுவனமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை  திருத்தியுள்ளது.

அதன்படி,  எரிவாயு  12.5 கி.கிராம் - 2840 ருபாவாகவும்  5 கிலோ கிராம் எரிவாயு 1135 ருபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4