மதுபான உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு பணம் அறவீடு

Prabha Praneetha
4 years ago
மதுபான உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு பணம் அறவீடு

பல்பொருள்   அங்காடித் தொடர்களுக்கு, மதுபான உரிமங்களை வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்காக ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமிருந்தும் 70 மில்லியன் பணம் அறவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண(Buddhika Pathirana) இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்ட பத்திரன, ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு மது உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.

மதுபான உரிமங்களிலிருந்து பெறப்படும் நிதியின் ஒரு பகுதி அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினருக்கு அல்லது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்லது ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் அமைப்பாளருக்கு வழங்கப்படும்.

நிதியின் மற்றொரு பகுதி பௌத்த மதகுருமார்கள் உட்பட மதுபான உரிமங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் புத்திக பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4