நாவூறும் சுவையில் பப்பாளி அல்வா.

Prabha Praneetha
4 years ago
நாவூறும் சுவையில் பப்பாளி அல்வா.

தேவையான பொருட்கள்

முழு பப்பாளி - 1
பால் - 250 கிராம்
நெய் - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 கப்
முந்திரி , பூசணி விதை - கையளவு
தேங்காய் துருவியது - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
 

செய்முறை :

  • பப்பாளியை நன்கு கட்டிகளின்றி மசித்துக் கொள்ளவும்.
  •  
  • பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும்.
  •  
  • கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் மசித்து வைத்துள்ள பாப்பாளியை கொட்டி கிளறவும். தண்ணீர் வற்றியதும் காய்ச்சிய பாலை ஊற்றவும்.
  •  
  • அடி பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும். குறைந்த தீயில் வைத்துக்கொள்ளவும்.
  •  
  • அதேசமயம் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை உருக வைத்துக்கொள்ளுங்கள். உருக்கியதும் அதை அல்வாவில் கொட்டி கிளறவும்.
  •  
  • தண்ணீர் வற்றி தளதளவென கெட்டியாகும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
  •  
  • மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் பூசணி விதைகளை சேர்க்கவும். அடுத்ததாக துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதை தற்போது கிளறி வைத்துள்ள அல்வாவில் கொட்டவும்.


சுவையான பப்பாளி அல்வா தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4