இலங்கை வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி 5 மணிநேரத்தின் பின் நாடு திரும்பியது ஏன்?

#Airport
Prathees
4 years ago
இலங்கை வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி 5 மணிநேரத்தின் பின் நாடு திரும்பியது ஏன்?

இலங்கைக்கு வந்த ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர்  5 மணிநேரம் தங்கிய பின்னர்  நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை தொடங்குமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  அறிவுறுத்தி உள்ளார்.

ஜார்ஜ் என்ற  அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒக்டோபர் 7ம்திகதி அன்று இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றி வெளியிட்ட அறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அவரது அறிக்கையில், தான் இலங்கைக்கு வருகை தந்து ஐந்து மணி நேரத்திற்குள் நாடு திரும்பியதாகவும் ஏனெனில் அவரால் போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்  எந்தவொரு நிறுவனத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்ரசர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையிடம் வலியுறுத்தி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4