வாழை இலை மீன் வறுவல்

Prabha Praneetha
3 years ago
 வாழை இலை மீன் வறுவல்

தேவையான பொருட்கள் :

மீன்  - அரை கிலோ

சின்ன வெங்காயம்  - 10

மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்

கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்

பூண்டு   - 4

இஞ்சி - சிறிது

புதினா, கொத்தமல்லி இலை - சிறிது

கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய்   - 2 ஸ்பூன்

செய்முறை :

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிசறி தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

அதன் பிறகு வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி நன்றாக பேக் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!