சுவிற்சலாந்தில் கொவிட் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் கொவிட் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

சுவிற்சலாந்தில் ஒக்டோபர் 10ம்திகதி நடந்து முடிந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்று காரணமாக 390 பேர் வைத்தியசாலையிலும் அதில் 140 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டடிருந்தனர்.  அன்று எவரும் இறக்கவில்லை.

இங்கு கொரோனா வைரஸ் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டைப்போல குளிர் காலநிலை புதிய கொவிட் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனால் தடுப்புசிக்கான உந்துதல் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அறிகுறியற்ற மக்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை இனி இலவசம் அல்ல. விதிவிலக்குகள் உள்ளன. 

வைரஸ் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது ஆனால் இது "ஒரு சிறிய ஓய்வு" என்று பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தில் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் விர்ஜினி மஸ்ஸெரி கூறியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4