இந்திய இராணுவத்தின் பிரம்படி படுகொலையின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு

Reha
4 years ago
இந்திய இராணுவத்தின் பிரம்படி படுகொலையின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் உயிரிழந்தவர்களின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.  

1987ஆம் ஆண்டு அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது படுகொலை சம்பவமாக, கொக்குவில்- பிரம்படி படுகொலை அமைந்தது.

ஒக்ரோபர் 11,12ஆம் திகதிகளில் பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வீடுகளில் இருந்தவர்கள் வீதிக்கு இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும், வீதியில் படுக்க வைத்து டாங்கிகளால் ஏற்றி நசித்தும் இவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4