தம்புள்ளையில் பிணமாக கிடந்த 14 வயதுச் சிறுமி- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#Murder
Yuga
4 years ago
தம்புள்ளையில் பிணமாக கிடந்த 14 வயதுச் சிறுமி- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தம்புள்ளையில் கடந்த சனிக்கிழமை கைவிடப்பட்ட வீட்டின் படுக்கை அறையில், படிக்கச்சென்ற 14 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

அதையடுத்து, இச் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார்.

உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக குறித்த நபர் சாட்சி வழங்கியுள்ளார்.

நேற்று தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி இந்த சாட்சியங்களை பதிவு செய்தார்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இன்று சிறுமியின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் கணவன் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் நீண்ட காலமாக வீடுகளை மாற்றிக்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலைக்கு காரணமான சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4