அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள மற்றொரு ஒப்பந்தம்?

#America #SriLanka
Prathees
4 years ago
அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள மற்றொரு ஒப்பந்தம்?

இலங்கை மின்சார துறை தொடர்பில் அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் இன்று (12) மற்றொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் உறுப்பினர்  ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இதற்காக நிவ் போட்ரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால், பாரிய தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தம் இதுவரையில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4