திருகோணமலையில் ரயில் கடவையில் கோர விபத்து! - பொலிஸ் அதிகாரி பலி(படங்கள் இணைப்பு )

Prabha Praneetha
4 years ago
திருகோணமலையில் ரயில் கடவையில் கோர விபத்து! - பொலிஸ் அதிகாரி பலி(படங்கள் இணைப்பு )

திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார், ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே விபத்துக்குள்ளானது எனவும், சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தினாலே விபத்து சம்பவித்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன (வயது 55) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4