24 மணிநேரத்தில் 94 பேர் கைது!

Reha
4 years ago
24 மணிநேரத்தில் 94 பேர் கைது!

சுகாதார அமைச்சால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 80 ஆயிரத்து 654 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.  

இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 உள்நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் நேற்று 1,414 வாகனங்களில் பயணித்த 2 ஆயிரத்து 258  பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும், அநாவசியமான முறையில் மாகாண எல்லையைக் கடந்து 186 வாகனங்களில் பயணித்த 317 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4