அமெரிக்க விமான விபத்து இந்திய டாக்டர் பலி

#world_news #United_States
அமெரிக்க விமான விபத்து இந்திய டாக்டர் பலி

அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்திய இதயநோய் நிபுணர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் பிறந்த டாக்டர் சுகதா தாஸ், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், யூமா பிராந்திய மருத்துவமனையில் இதய நோய் நிபுணராக பணியாற்றி வந்தார். சான் டிகோவில் வசித்து வந்த இவர், தனக்கு சொந்தமான சிறிய விமானத்தில் மருத்துவ மனைக்கு சென்று வருவது வழக்கம். சுகதா ஓட்டிச் சென்ற விமானம் திடீரென சான்டி பகுதியில் உள்ள பள்ளியில் விழுந்து நொறுங்கியது.

விமானம் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகில் இருந்த இரு வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சுகதா பலியானார். விமானம் விழுந்ததில் ஒரு தொழிலாளியும் உயிரிழந்தார். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.''மிகச் சிறந்த இதய நோய் நிபுணரை இழந்து விட்டோம்,'' என, யூமா பிராந்திய மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரத் மகு தெரிவித்துள்ளார். சுகதாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். சுகதா தாஸ், வெளிநாடுகளில் எய்ட்ஸ் பாதித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ 'பவர் ஆப் லவ்' என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4