வீட்டின் படுக்கையறையில் இருந்து இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்! நடந்தது என்ன?

#SriLanka #Death
Yuga
4 years ago
வீட்டின் படுக்கையறையில் இருந்து இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்! நடந்தது என்ன?

தொடங்கொட – உடவத்த கொட பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் இருந்து, இரத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

இந்த நிலையில், மீட்கப்பட்ட பெண்ணின் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக நீதிமன்ற மற்றும் மரண பரிசோதனை இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை, பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவத்த கொட வீடொன்றில் படுக்கையறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த பெண்னொருவரின் சடலம் நேற்று மீட்க்கப்பட்டிருந்தது.

பொலிசாரின் விசாரணைகளில் உயிரிழந்த குறித்த பெண் 54 வயதுடைய அதேபகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிரிழந்தவரின் தலை மற்றும் கைகளில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் களுத்துறை நீதிபதியினால் நீதிமன்ற பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் உடல் மரண பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4