பதுக்கலால் சீனிக்கு ஏற்பட்ட நெருக்கடி - எகிறுகிறது மீண்டும் சீனியின் விலை

#sugar #prices
Reha
4 years ago
பதுக்கலால் சீனிக்கு ஏற்பட்ட நெருக்கடி - எகிறுகிறது மீண்டும் சீனியின் விலை

சீனி விலை நெருக்கடி தொடர்ந்தும் சந்தையில் நிலவிவருகின்றது. கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக வியாபாரிகள் சீனி விற்பனை செய்வதாக மக்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம்   முறைப்பாடு செய்துள்ளனர்.

தற்போது கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை நேற்று (12) வரை 138 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார ஆணையகம் செப்டம்பர் 2 ஆம் திகதி வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பின்படி வெள்ளைச் சீனியின் சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பக்கெட் செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 125 ரூபாய் ஆகும்.

சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதியாளர்கள் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாக ஒரு கிலோ சீனி துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இன்றுமுதல் இரத்து செய்யப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4