இரண்டு வழக்குகளிலும் ரிஷாத் பிணையில் விடுதலை

#Rishad Bathiudeen #Colombo #Court Order
Prathees
4 years ago
இரண்டு வழக்குகளிலும் ரிஷாத் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பாக கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில்  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பிணை வழங்கியுள்ளது.

சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறும், அவரை வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி இஷாலினி, மர்மான முறையில் தீப்பற்றியெரிந்து மரணமடைந்தமை தொடர்பிலான வழக்கில் 5 ஆவது பிரதிவாதியாக ரிஷாட் பதியுதீன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4