கருப்பு உளுந்து சுண்டல்

Prabha Praneetha
3 years ago
கருப்பு உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து - 1 கப்
தேங்காய் துருவல் - 2 tsp
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 tsp
உப்பு - தே.அ

தாளிக்க :

கடுகு - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

கருப்பு சுண்டல் செய்ய முதல் நாள் இரவு வறுத்து ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை கழுவி குக்கரில் போடுங்கள். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வர வேக வைக்கவும்.

வெந்ததும் தண்ணியை வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் மற்றும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்த உளுந்தில் போடுங்கள்.

இறுதியாக துருவிய தேங்காயை அதில் தூவி கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான் உளுந்து சுண்டல் தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!